ADVERTISEMENT

சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

06:58 PM Jul 08, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது 'ஏஜென்ட் கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் ரத்னா குமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடித்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் 'குலுகுலு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். முன்னதாக இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT