/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/460_5.jpg)
தமிழில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது 'ஏஜென்ட் கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் ரத்னா குமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடித்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'குலுகுலு' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு காவலர் ஒரு பிச்சைக்காரரிடம் சோதனை செய்வதாக கூறி அவரை அடித்துவிடுகிறார். பிச்சைக்காரருக்கு உதவ சென்ற சந்தானத்திடம், 'என்னை கேட்டியே...அவனை கேட்டியா' என பிச்சைக்காரர் கேள்விகேட்கிறார். இந்த வசனம் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)