Skip to main content

"என் நண்பேண்டா பார்த்தாவால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்" - உதயநிதி

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

udhayanidhi stalin speech about santhanam in 'gulu gulu' movie press meet held at yesterday

 

ராஜ் நாராயணன் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குலுகுலு'. ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் சந்தானம், ரத்னகுமார், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.     

 

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், " நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம், சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்த படத்திற்காக இயக்குநர் ரவிக்குமார், மடோன் அஷ்வின், லோகேஷ் கனகராஜ் எனப் பல நண்பர்கள்  உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ் செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.

 

சந்தானம் பேசுகையில், "இந்த படத்தைப் பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறைவாக படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னாவின் நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்" எனப் பேசினார். 

 

இவர்களை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், "நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்