மன்ஜோய் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட்கண்ணாயிரம்' படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாகஇயக்குநர் ரத்னகுமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில்நடிக்கவுள்ளார். இவர்இயக்கத்தில் வெளியான மேயாத மான், ஆடை ஆகிய இருபடங்களும்ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த நிலையில், தற்போது சந்தானத்துடன் இவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் 'குலுகுலு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதவுள்ளார். எம்.ரத்னகுமார் இயக்கத்தில்வெளியான மேயாத மான் விவேக் எழுதியிருந்த மேகமோ அவள் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று(17.3.2022) வெளியான நிலையில் பாடலாசிரியர் விவேக் இதனைதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைரீட்வீட் செய்த படத்தின் இயக்குநர் ரத்னகுமார்,"மேகமோ அவள் என்ற பாடல் 'குலுகுலு' படத்திலும் கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். இதற்குபதிலளித்த பாடலாசிரியர் விவேக்," யாருகிட்ட கேக்குற அண்ணன்கிட்ட தான கேக்குற கேளு.." என்ற தோரணையில் இருக்கும் மீம்ஸைபகிர்ந்து கலாய்த்துள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
@MrRathna ??♂️ https://t.co/ou0QgpdmoYpic.twitter.com/DYSOSkDLB8
— Vivek (@Lyricist_Vivek) March 17, 2022