rathnakumar direction santhanam starring gulugulu film

Advertisment

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக்கிலோனா' மற்றும் 'சபாபதி' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத்தொடர்ந்து மன்ஜோய் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட்கண்ணாயிரம்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் எம்.ரத்னகுமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இவர்இயக்கத்தில் வெளியான மேயாத மான், ஆடை ஆகிய இருபடங்களும்ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த நிலையில், தற்போது சந்தானத்துடன் இவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் 'குலுகுலு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பைவெளியிட்டுள்ள படக்குழு அத்துடன் படத்தின்மோஷன் போஸ்டரையும்வெளியிட்டுள்ளது. "அவன் அம்மாகிட்ட அரைகுறையாகத்துகிட்ட ஆங்கிலம், பொதுசேவை செய்யிறான்னுபொது மாத்துவாங்குவான்" என்ற வசனங்களுடன்வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் பலரையும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.