ADVERTISEMENT

வேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்!

05:26 PM Dec 14, 2019 | santhoshkumar

அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா பல வருட தடைகளை உடைத்து வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் அசுரன் படத்தின் ஷூட்டிங்கின்போதே துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. பின்னர், சோழர் கால தற்காப்பு கலை ஒன்றையும் கற்றுக்கொண்டு படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மெஹரின் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃப்லிம்ஸ் சார்பில் தியாகராஜன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். விவேக்- மெர்வின் கூட்டணியில் இப்படத்திற்கு இசை அமைக்கப்பட்டுள்ளது. சில் ப்ரோ என்றொரு பாடலையும் தனுஷ் பாடியிருக்கிறார். அது வெளியாகி இரண்டு வாரங்கள் மேலான நிலையில் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முதன் முறையாக வேறொரு தனுஷ் கதாபாத்திரத்தின் தோற்றத்தை காட்டியுள்ளது படக்குழு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT