கடந்த வருடம் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள பட நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் சதுர் முகம் என்னும் படத்தில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

dhanush with manju

இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு மஞ்சுவாரியர் வில்லங்களுடன் மோதும் காட்சி ஷூட் செய்தனர். அபாயகரமான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது மஞ்சு வாரியருக்கு பதிலாக டூப் போட்டுக்கொள்ளலாம் என்று ஸ்டண்ட் இயக்குனர் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், என்னுடைய காட்சியை நான் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக மஞ்சு வாரியர் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார்.

மேலே இருந்து கீழே குதிப்பதுபோன்ற காட்சி, பாதுகாப்பு கயிறு கட்டிக்கொண்டு குதித்தும், மஞ்சு வாரியருக்கும் பலமான அடிபட்டது. காலிலும் இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. மஞ்சு வலியால் துடிக்க, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் படக்குழுவினர்.

Advertisment

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வருகிற 12-ந்தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மஞ்சுவாரியர் எழுதி உள்ள கடிதத்தில் டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.