வடசென்ன படத்தை தொடர்ந்து தனுஷ் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், மற்றொன்று துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ். பட்டாஸ் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்று தனுஷின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

Advertisment

dhanush

இதில் இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கிறார். சினேகா மற்றும் மெஹ்ரின் இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் துரை செந்தில்குமார் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், “படத்தில் தனுஷ் மகன், அப்பா என்று 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் களரிக்கு முன்பு சோழர் காலத்தில் இருந்த ஒரு தற்காப்பு கலையை சுற்றி வருகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் 15 முதல் 20 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார். நடிகை சினேகாவும் பயிற்சி எடுத்துக்கொண்டார். இது பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisment

இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.