கடந்த டிசம்பர் மாதம் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியானதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு பட்டாஸ் படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷ் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மெஹரின் பிர்சாடா நடித்துள்ளனர். கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Advertisment

dhanush

அடிமுறை என்னும் தமிழர்களின் பழமைவாய்ந்த தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷ் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக நெல்லையிலுள்ள பிரபல திரையரங்கான ராம் சினிமாஸில் தனுஷ் ரசிகர்கள் தனுஷுக்கு சிலை வைத்துள்ளனர். இந்த சிலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் 7 அடி உயரத்தில் பட்டாஸ் திரைப்படத்தில் வரும் திரவியம் கதாபாத்திரத்தில் சிலையை வைத்திருக்கின்றனர்.