Skip to main content

கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட நடிகர் கருணாஸ்...

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

  karunas


இதனை தடுக்கும்பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா குறித்து பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் காரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல் ஒன்றை உருவாக்கி, அதை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி வீட்டில் ஏன் ரெய்ட் இல்லை? காரணம் கூறுகிறார் கருணாஸ்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

AIADMK MLA Karunas press meet

 



விஜய்க்கு இப்படி தொடர்ச்சியாக பல நெருக்கடிகள் வந்தது. அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அமீர் போன்ற பல சினிமா பிரபலங்களும், வேல்முருகன், சீமான் போன்ற அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் நெய்வேலியில் ஆரவாரங்களுக்கு நடுவே ரசிகர்கள் மத்தியில் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை விஜய், தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தின் தற்போதைய சென்ஷேசன் ஆனார்.

இந்நிலையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினி பா.ஜ.க விற்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால் கூட வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்திருக்கலாம் என்றும் படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் இருந்த இடத்தில் விசாரணை என்ற பெயரில் வருமான வரித்துறை சென்றதால் தற்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி நடிகர் விஜயின் பலத்தை மத்திய மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்தார். 

 

Next Story

மல்லாக்கப் படுத்து எச்சில் துப்புகிறது பாஜக... நடிகர் கருணாஸ் விளாசல்..!!!

Published on 25/12/2019 | Edited on 25/12/2019

"பெரியாரை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மல்லாக்கப் படுத்து எச்சிலை துப்புகின்றது.. திராவிட கொள்கைகளும், சித்தாங்களும் இல்லையேல் நாம் இல்லை." என பாஜகவையும், ஹெச்.ராஜாவையும் சரமாரியாக விளாசித்தள்ளியுள்ளார் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்.
 

அதிமுக. கூட்டணியில் தன்னுடைய முக்குலத்தோர் புலிப்படை உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான நடிகர் கருணாஸ். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

LOCAL BODY ELECTION SIVAGANGAI DISTRICT KARUNAS MLA SPEECH


இந்நிலையில், இரவினில் திருப்பத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸோ, " பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை..! அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை.! இப்படித்தான் இருக்கின்றது நமது வரலாறு..! அப்படி இருக்கும் பொழுது இந்த மண்ணில் திராவிட கொள்கைகளையும் திராவிட இயக்கங்களையும் சுயமரியாதை கொள்கைகளையும், பொதுவுடமை கொள்கைகளையும் வளர்த்த, பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளையும் பெற்று தந்த ஒரு மனிதனை அரசியலுக்காக பாஜக தரம் தாழ்ந்து பேசுவது மல்லாக்க படுத்து எச்சிலை துப்பிக் கொள்வதுபோல் இருக்கிறது.


சமீபகாலமாக தேசிய கட்சியான பாஜக இவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்ய வேண்டுமா.?" என பாஜகவினை விளாசியவர் தொடர்ந்து, "நான் அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றேன். பாஜக கூட்டணியில் இல்லை. இன்னொன்று பாஜக கட்சியில் ஹெச்.ராஜான்னு ஒரு மனுசன் இருக்கிறார் அவரைத் தெரியுமா..? அவர் என்றைக்கும் நல்லது பேசியது கிடையாது. அவருடைய பேச்சை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்." என தன் பங்கிற்கு ஹெச்.ராஜாவையும் தாக்கி பேசிவிட்டு வாக்குகள் சேகரித்து சென்றார் அவர்.