ADVERTISEMENT

‘பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார்’ விஜய்- ட்விட்டர் நிறுவனம்

08:41 AM Jun 22, 2019 | santhoshkumar

நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.

இந்நிலைடில் ட்விட்டரி நிறுவனத்தின் ட்விட்டர் மொமண்ட்ஸ் இந்தியா என்ற பக்கத்திலிருந்து பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பதிவிட்டு, அதில் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார் விஜய் தனது 45வது பிறந்தநாளை தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டு கொண்டாடி வருகிறார் என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக அஜித் படத்தின் நேர்கொண்டா பார்வை டீஸர் வெளியானபோது கோலிவுட்டின் கிங் என்று அஜித்தை குறிப்பிட்டு யு-ட்யூப் நிறுவனம் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT