நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.
இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு பிகில் படத்தின் இரண்டாவது லுக்கையும் ரிலீஸ் செய்திருந்தனர். அதில் கால்பந்தாடும் விஜய்யின் பெயர் மைக்கெல் என்பது அவர் அணிந்திருக்கும் ஜெர்ஸியின் மூலம் தெரிகிறது. சிலர் இளம் வயது விஜய்யின் அப்பாவாக வரும் வயதான விஜய்யின் பெயர்தான் பிகில் என்று சொல்கின்றனர். ஆனால், அந்த பெயரும் கால்பந்தாடும் இளம் விஜய்யின் செல்லப் பெயர்தானாம். வயதான விஜய்யின் பெயர் ராயப்பன் என்று புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.