அட்லி விஜய்யும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரியும் படம் பிகில். இதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

batman

வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது. தற்போது இப்பாடல் செம வைரலாகி வருகிறது.

Advertisment

அண்மையில் இப்படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார்.

இந்நிலையில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜய் தன்னுடன் பணியாற்றிய பிகில் படக்குழுவினர் 400 பேருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார். தற்போது 95 சதவீத பிகில் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகவும், விஜய் தற்போது டப்பிங்கை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 130 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தின் பிரபல பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னாவிற்கும் விஜய்யின் தங்க மோதிரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த மோதிரத்தை பேட்மேனுக்கு அணிவித்திருந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர் பப்ளிசிட்டி டிஷைனராக முதல் விருது. நன்றி விஜய் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பைரவா படத்திலும் தன்னுடன் பணியாற்றியவர்களை கௌரவித்து தங்க செயின் பரிசளித்தார். மெர்சல் படத்தில் தங்க காசு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.