அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யும் அட்லியும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரிகிறார்கள் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் இருக்கிறது.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.120 பட்ஜெட்டுக்கு தொடங்கப்பட்ட இந்த படத்தின் பட்ஜெட் பின்னர் பல்வேறு காரணங்களால் ரூ.150 கோடிவரை செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தற்போது வரை 200 கோடி ருபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

bigil

இந்த நிலையில் பிகில் திரைப்படம் ரிலீசாகி 7 நாட்களாகியிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் பிகில் திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. படம் பார்க்க ஆன்லைனில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே முன்பதிவு செய்ததால் தேவி திரையரங்குக்கு படம் பார்க்க வந்தவர்கள் மாற்றப்பட்டனர். இது பற்றி தியேட்டர் நிர்வாகத் தரப்பு கூறும் போது, தேவி சினிமாவில் நான்கு ஸ்க்ரீன்கள் உள்ளன. இதில் இரண்டு ஸ்க்ரீன்களில் பிகில் படம் திரையிடப்பட்டது. இரன்டு ஸ்க்ரீன்கள் அளவிற்கு கூட்டம் இல்லை என்ற காரணத்தினால் படம் பார்க்க வந்தவர்களை ஒரே ஸ்க்ரீனில் உட்கார வைத்தோம் என்று தியேட்டர் நிர்வாக தரப்பு கூறிவருகின்றனர்.இது பிகில் படத்துக்கு மட்டும் அல்ல மற்ற படங்களும் இப்படித் தான் திரையிடப்படுகிறதுஎன்றுகூறிவருகின்றனர்.