ADVERTISEMENT

காத்திருந்த ரசிகர்கள்! சர்பிரைஸ் கொடுத்த போனி கபூர்! வெளியானது ‘வலிமை’ அப்டேட்!

03:38 PM Mar 15, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்பவது வழக்கம்.

ஆனால், தயாரிப்பு தரப்போ படம் குறித்த எந்த அப்டேட்டையும் இதுவரை வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. இது, அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘வலிமை’படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில்... "திரு. அஜித் குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி முதல் 'வலிமை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பர பணிகள் தொடங்கப்படும்" என பதிவிட்டுள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT