/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_340.jpg)
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியுள்ளதால்அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டுக்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி வருகின்றனர்.
'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று காலை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது அஜித் ரசிகர்கள் போனி கபூரை பாலாபிஷேகம் செய்து வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)