Skip to main content

"ரசிகர்களை காக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல" - போனி கபூர் விளக்கம்!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

kgjgjgkj

 

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் ‘வலிமை’ படம் குறித்து பேசும்போது... "‘வலிமை’ அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எங்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் இன்னும் தயாராகவில்லை என்பதே அதற்கு காரணம். இப்போதுதான் படத்தின் பெரும்பகுதி வேலைகள் நிறைவடைந்துள்ளது. அதனால்தான் மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் உட்பட ப்ரோமோஷன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

 

நான் இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்தவரை, கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படம் இருப்பதை என்னால் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். இதில் ஒரு அழுத்தமான குடும்பக் கதையும், அழுத்தமான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இது அஜித் ரசிகர்களையும் தாண்டி அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக திருப்திப்படுத்தும். பைக் துரத்தல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜித்தே நடித்துள்ளார். 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் போல் இந்தப் படத்தையும் வட இந்தியாவிலும் வெளியிடுகிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார்.