இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாகவுள்ளது.
இதனைத்தொடர்ந்துநடிகர் அஜித்தின் 61 வது படத்தை எச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச். வினோத் கூறியிருந்தார்.
இந்நிலையில் 'ஏ.கே 51'படத்தில் அஜித்தின் கெட்டப் லுக்கை தயாரிப்பாளர் போனிகபூர்தனது சமூகவலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இது ஏகே 51 படத்திற்கான ஆயத்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.