valimai team watching film with fans

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியுள்ளதால்அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 'வலிமை' படக்குழுவினர் திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளனர். சென்னையில் உள்ளரோகிணி திரையரங்கில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், கதாநாயகி ஹுமா குரேஷி, நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளனர். இது தொடர்பானபுகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.