ADVERTISEMENT

சிம்புவிற்கு உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்!

11:15 AM Jan 19, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க உள்ள படம் 'பத்து தல'. இது கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இப்படத்தில் அவர் இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார். நடிகர் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக், கலையரசன், டிஜே, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT