
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அவரது திருமணம் குறித்து அடிக்கடி வதந்தி உலா வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
அண்மையில்கூட கரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே சிம்புவின் திருமணம் நடைபெறப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதற்கு சிம்புவின் தந்தை டி.ஆர். மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே திடீரென்று சிம்பு - த்ரிஷா இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த 2 நாட்களாக செய்தி உலவி வருகிறது. இருவரும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை. இவர்கள் இருவருமே முன்னணிப் பிரபலங்கள் என்பதால், இந்தத் திருமண செய்தி வேகமாகப் பரவி வருகிறது. அண்மையில் இருவரும் இணைந்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற கௌதம் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்திருந்தனர்.
பின்னர், இச்செய்தி வதந்தி என்றும் சிம்பு த்ரிஷா இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்றும் இதுதொடர்பாக விசாரித்தபோது தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)