ADVERTISEMENT

'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறனுடன் கைகோர்த்த தனுஷ்!

06:50 PM Oct 30, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் வெற்றிமாறன் 'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறு கதையைத் தழுவி எடுக்கப்படுகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை எல்ரெட். குமார் தயாரிக்கிறார். 'விடுதலை' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான 'விடுதலை' படத்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 'விடுதலை' படத்தின் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், இயக்குநர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில்," விடுதலை படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடி உள்ளதாகவும், அவருக்கு இசைஞானி இளையராஜா 4 மணி நேரம் சொல்லிக் கொடுத்ததாகவும் " கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT