viduthalai 1 first single update sung by dhanush

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதி தனது டப்பிங் பணிகளைத்தொடங்கினார்.

இந்த நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முதல் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'ஒன்னோட நடந்தா' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். வருகிற 8 ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இளையராஜா இசையில் முதல் முறையாக தனுஷ் பாடியுள்ள இப்பாடலைக் கேட்கரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisment

மேலும் இது தொடர்பாக ஒரு வீடியோவெளியாகியுள்ளநிலையில் அதில் இளையராஜா, தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் இப்பாடல் குறித்து ஜாலியாக பேசுகின்றனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.