Viduthalai Part 1  Onnoda Nadandhaa Lyric video released

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முதல் பாடல் 'ஒன்னோட நடந்தா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை தனுஷ் மற்றும் அனன்யா ஃபட் பாட சுகா வரிகள் எழுதியுள்ளார்.

இப்பாடலை பார்க்கையில் சூரி கதாபாத்திரம் மற்றும் பவானி ஸ்ரீ கதாபாத்திரம் இருவரும் காதலை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இளையராஜா இசையில் முதல் முறையாக தனுஷ் பாடியுள்ள இப்பாடல் காதலர்களை உருகவைத்துள்ளது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisment