/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/498_1.jpg)
'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்தாக 'ஆடுகளம்'படத்தை இயக்கிருந்தார். மதுரை சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, தேசிய விருதுகளையும் வென்றது. இதனை தொடர்ந்து 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது சூரி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை' படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிப்பை தாண்டி நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
அந்தவகையில்இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக 'அனல் மேலே பனித்துளி' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைநடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் நேரடியாக சோனி லைவ்வில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)