Skip to main content

உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று: ஈக்வெடார் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று: 
ஈக்வெடார் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறும் கால்பந்து உலககோப்பை தொடருக்கான தகுதி சுற்று நடைபெற்று வந்தது. ஈக்வெடார் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் மட்டுமே உலககோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் அர்ஜென்டினா களம் இறங்கியது. தொடக்கத்தின் முதல் 40 நொடிகளில், ஈக்வெடார் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து சீற்றம் கொண்ட அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

சார்ந்த செய்திகள்