Heavy rain; Agonizing over not being able to cremate the bodies

கள்ளக்குறிச்சியில்கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 21 பேர் உடல்களை முதல்கட்டமாக தகனம் செய்வதற்கான தகன மேடை கோமுகி நதிக்கரையில் அமைக்கப்பட்டு உடல்கள் தகனம் செய்யும் பணி தொடங்கியது. அப்போதுஅந்தப் பகுதியில் கனமழை பொழிந்ததால் உடல்களை தகனம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஒரே ஒரு உடல் மட்டும் எரியூட்டப்பட்டுள்ளது. மழை காரணமாக 21 உடல்களை தகனம் செய்யதாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மறுபுறம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முடிவெடுத்து அதற்கான பணிகளும், இறுதி ஊர்வலங்களும்மழை ஓய்ந்த பிறகு தற்போதுதொடங்கியுள்ளது.

Advertisment