8 crore rupees bridge washed away in the river; Shock before the opening ceremony

Advertisment

கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்டப்பட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 89 லட்சம் ரூபாய் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வந்த மக்களுக்கு இந்த பாலம் பேருதவியாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் திறப்பு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திடீரென பாலம் இடிந்து விழும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதால் இடிந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுத்திறப்பு விழாவிற்கு காத்திருந்த பாலம் சரிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.