ADVERTISEMENT

முருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

06:03 PM Oct 18, 2019 | suthakar@nakkh…


முருங்கையின் நற்குணங்களை பற்றி சொல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு போகலாம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முருங்கையில், ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார். அந்த வகையில் முருங்கையின் தலைபகுதி முதல் முருங்கையின் பட்டை வரை அனைத்தும் மருத்துவ பலன்கள் நிரம்பி உள்ளது.

முருங்கைப் பூ:

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைக் கீரையை வேகவைத்து அதனுடைய சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு வெகுவாக குறையும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்த நிலை, அதிகப்படியான சூடு, கண் புரை நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

முருங்கை காய்:

உடலுக்கு அதிகப்படியான வலிமையைக் கொடுக்கும். பிஞ்சு முருங்கைக்காய் ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது இன்னும் சுவையையும் சத்தையும் தரும். வயிற்றுப் போக்கை குணப்டுத்துகிறது. வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

ADVERTISEMENT



முருங்கை இலை :

முருங்கை இலையை மூலம் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். நச்சுக்களை அகற்றும் உணவு வகைகளில் முருங்கை முதலிடத்தில் இருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, கால்சியம் ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். தோல் வியாதிகளை தீர்க்கும் ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டு.கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை ஒரு வரப் பிரசாதம் ஆகும்.

முருங்கைப் பட்டை :

நரம்புக் கோளாறுக்கு முருங்கை பட்டை ஆகச்சிறந்த மருந்து. அதனை பொடியாக்கி உணவில் சேர்ந்து சாப்பிட்டு வர நரம்பு கோளாறுகள் படிப்படியாக குறையும். கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து தடவினால் கால், கால்களில் ஏற்பட்ட வீக்கங்களில் குறையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT