
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே அரசு பேருந்து மீது மரத்தின் கிளை ஒடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வள்ளலார் நகர் நோக்கிபேசின் பிரிட்ஜ் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின்மீதுசாலை ஓரத்திலிருந்த அரசமரத்தின் கிளையானது ஒடிந்து விழுந்தது. பேருந்து மீது கிளை விழுந்ததை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் அனைவரும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டனர்.

தொடர்ந்து பேருந்தின் பின்புறம் சேதமடைந்ததால் பயணிகள் அனைவரும் மாற்றுப்பேருந்தில் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முறிந்த கிளையைமாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)