ADVERTISEMENT

அசைவத்தில் மீன் என்றால்  ஓகே ….

01:38 PM Feb 04, 2019 | Anonymous (not verified)

கொஞ்ச நாட்களுக்கு முன்பு அணைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் பெரிதும் பேசப் பட்டது அசைவ உணவுகளில் கலப்பிடம் செய்கிறார்கள் அதாவது மட்டனில் நாய் கறியும் ,சிக்கனில் பூனைக் கறியும் கலப்பதாக செய்திகள் வந்தது .இதனால் மக்கள் அனைவரும் இறைச்சி கடைகளிலும் ,அசைவ உணவு ஹோட்டலிலும் மக்கள் செல்வது பெரும் அளவுக்கு குறைந்தது.இருந்தாலும் அசைவ உணவு பிரியர்களுக்கு அசைவ உணவில் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த போது மீனை விரும்பி சாப்பிட்டார்கள்.மீன் சாப்பிடுவதால் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருந்தது .அப்படி என்ன தான் மற்ற மாமிசங்களுக்கும், மீனுக்கும் வேறுபாடு உள்ளது என்று பார்க்கலாம். அதாவது, மாமிசங்களில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கக் கூடியது. ஆனால், மீன்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நன்மை விளைவிக்கக் கூடியது. அதாவது, மனித உடலின் வெப்பத்தை விட அதிக வெப்பம் உள்ள விலங்குகளின் கொழுப்பு கெடுதலை விளைவிக்கக் கூடியது எனவும், மனிதஉடலின் வெப்பத்தை விட குறைவான வெப்பம் உள்ள விலங்குகளின் கொழுப்பு நன்மை விளைவிக்கும் என்றும் கூறலாம்.

ADVERTISEMENT



மாடு, பன்றி அல்லது பறவையின் வெப்பநிலை சாதாரணமாக 101.3 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இது மனித உடல் வெப்பநிலை (98.6 டிகிரி பாரன்ஹீட்)யை விட அதிகம். கோழியின் வெப்பநிலை அதைவிட அதிகமாக 106.7 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. விலங்குகளின் கொழுப்பின் வெப்பநிலை, அதன் உடல் வெப்பநிலைக்கு இணையாகவே இருக்கும். எனவே, இந்த விலங்குகளின் வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை கொண்ட மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது, அவை மிகவும் கடுமையானதாக மாறிவிடும். இவை ரத்தத்தை தடிமனாக்கிவிடும். தடிமனான ரத்தத்தின் ஓட்டம் பாதிக்கப்படும். இதனால், ரத்த நாளங்களில் ரத்தம் நின்றுவிடுவதுடன் உறைந்தும் விடும்.
மறுபுறம், மீன்கள் குளுமையான உடலமைப்பு கொண்டவை. இயல்பான நிலையில், அதன் வெப்பநிலை, மனித உடல் வெப்பநிலையை விட குறைவாகவே இருக்கும். மனித உடலுக்குள் மீன் உணவு சென்றால் என்ன மாற்றம் ஏற்படும்? கொழுப்பை வாணலியில் போட்டு வனக்குவது போல, கொழுப்பு உருகி திரவமாக மாறிவிடும். மீன்களில் உள்ள எண்ணெய், மனித ரத்தக் குழாயில் நுழையும்போது, ரத்தம் திரவமாக மாறும், ரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்புகளின் அளவு குறையும். அசைவ உணவு பிரியர்களில் மீனுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT