Skip to main content

திருமண போட்டோ ஷூட்டை அதிரவைத்த லெபனான் விபத்து... வைரலாகும் வீடியோ!!    

Published on 09/08/2020 | Edited on 09/08/2020
Lebanon

 

கடந்த 4ஆம் தேதி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரத்தில் 2750 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து, நகரத்தையே அதிரவைத்தது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தின்போது திருமண போட்டோ ஷூட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் போட்டோ ஷூட்டின் போது, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போதே அந்த விபத்து நடந்துள்ளது. திருமண  உடையில் புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண் விபத்து சத்தத்தால்  அதிர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதுமே, எல்லா தருணத்தையும் முக்கியமானதாக மாற்றுபவை புகைப்படங்களே. ஆனால் திருமண போட்டோ ஷூட்டே இப்படியொரு  மறக்க முடியாத தருணமாக மாறி இருக்கிறது. இந்த வீடியோவை புகைப்படக்கலைஞர் மஹமத் தீப் என்பவர் வெளியிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

லெபனானில் இருந்து திடீர் தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி - மத்திய கிழக்கில் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rocket attack from Lebanon towards Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர்  இன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில் அதனை இஸ்ரேல் நடு வானிலேயே தடுத்து தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட மற்றும் பதிப்பு நிலவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த மாதிரியான பதிலடித் தாக்குதலை கொடுக்க போகிறார்கள் என்று மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.