Skip to main content

ஹரிக்கேன் இர்மாவால் வரலாறு காணாத சேதம், மின்தடை!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
ஹரிக்கேன் இர்மாவால் வரலாறு காணாத சேதம், மின்தடை!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக ஹரிக்கேன் இர்மா புயலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.



இர்மா புயலின் தாக்கம் வலுவிலப்பதற்கு முன்பாகவே, போதுமானதற்கும் அதிகமான சேதத்தை புளோரிடா மக்களுக்கு தந்துவிட்டது. இன்னமும், அதன் தாக்கம் குறையாத நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 

இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 385 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் தங்குவதற்கான போதுமான வசதிகள் இருக்கின்றன என புளோரிடாவின் ஆளுநர் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் இர்மாவின் தாக்கத்தால் ஏறத்தாழ 34 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும், இது மேலும் அதிகரிக்கும் எனவும் புளோரிடா பவர் அண்ட் லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை சரிசெய்ய மிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்