Sirisena - modi

Advertisment

இந்திய அரசின் உளவுப் பிரிவான "ரா" அதிகாரிகள், இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி செய்வதாக பரவிய தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

அப்படி பரவிய செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த சிறிசேனா, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசினார்.

மோடியிடம் பேசிய அதிபர் சிறிசேனா,"இலங்கைக்கு உண்மையான நண்பர் நீங்கள் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை கெடுக்கும் வகையில், திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்களை பரப்பியுள்ளனர்.

Advertisment

அண்டை நாட்டுக்கே முதல் உரிமை என்ற இந்திய அரசின் முன்னுரிமை திட்டத்தின் மூலம் இந்தியா - இலங்கையிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நட்புறவு நாடுகளுக்கு முண்ணுதாரணமாக இருக்கின்றன. இந்திய உளவுப் பிரிவை எந்த சூழலிலும் இலங்கை சந்தேகிக்காது" என தெரிவித்திருக்கிறார் சிறிசேனா.