ADVERTISEMENT

'ஜாம்நகருக்கு கிடைத்த அங்கீகாரம் மதுரைக்கும் கிடைக்குமா?'-ஆனந்த் அம்பானி திருமண விழாவால் சர்ச்சை

10:26 AM Mar 02, 2024 | kalaimohan

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் குஜராத்தில் களைகட்டியுள்ளது. ஜாம்நகரில் இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். உலகப்புகழ் பெற்ற ரிஹானாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

சிறுவயதில் இருந்தே பாட்டி செல்லமான ஆனந்த் அம்பானி அவர் திருமணத்தை பிறந்த ஊரான ஜாம்நகரில் வைக்க வேண்டும் என்ற சென்டிமெண்டால் அங்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது அப்பா பிறந்த ஊர். சிறுவயதில் இங்கு வளர்ந்ததால் திருமணத்தை இங்கு நடத்த தீர்மானித்துள்ளோம் என ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் அங்கு வர இருப்பதால், ஒரு திருமண நிகழ்விற்காகவே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு திடீர் சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளார். '10 நாள் திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அங்கீகாரம் வழங்காமல் மத்திய அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?' என எக்ஸ் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT