Skip to main content

தொல்லியல் சின்னங்களை மாணவியர் கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் 

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Students should identify and document archaeological symbols

 

மதுரை நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வு மன்றம், முத்தமிழ் மன்றம் சார்பில் தொல்லியல் கள ஆய்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

கல்லூரித் தலைவர் மாரீஸ்குமார் தலைமை வகித்தார்.  மாணவி அபர்ணா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் கரிக்கோல் ராஜ், கல்லூரி தாளாளர் ஜெயக்குமார், கல்லூரி பொருளாளர் பாண்டியன், கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, “100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் கட்டடங்கள், அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொருட்கள் பரவிக் கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை தொல்லியல் சின்னங்கள் ஆகும். மாணவியர், அழிந்து போகும் நிலையில் தங்கள் பகுதிகளில் உள்ள இத்தகையவற்றை கள ஆய்வு மூலம் தேடி கண்டறிந்து ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். மாணவப் பருவத்திலேயே நம் பண்பாடு தொடர்பான தேடலை மாணவிகள் கற்றுக் கொண்டால், அது எதிர்கால வாழ்வை வளமாக்கும். தேடலே கள ஆய்வுக்கு அடிப்படை” என்று பேசினார்.

 

மேலும், கள ஆய்வு செய்யும் முறை, அதைப் பதிவு செய்து ஆவணமாக்குதல் பற்றியும் கூறினார். மாணவிகளுக்கு கல்வெட்டுகளைக் கண்டறிய அதன் எழுத்துகளை அறிமுகப்படுத்தி படிக்க கற்றுக் கொடுத்தார். மாணவி கணியா நன்றி கூறினார். மாணவி அபிநயா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் பாண்டிச்செல்வி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.