Skip to main content

மணமேடையிலேயே மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்; தடையில்லாமல் நடந்த திருமணம்

 

gujarat marriage bride incident viral 

 

திருமணத்தின் போது மணமகள் மயங்கி விழுந்து இறந்த நிலையில் அவரின் தங்கையுடன் மணமகனுக்குத்  திருமணம் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

 

குஜராத் மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகர் என்ற பகுதியில் விஷால் என்பவருக்கும் ஹித்தல் என்ற இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 25 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்குத் தயாராக இருந்த மணமகளுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதால் மணமேடையிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த ஹித்தலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகள் ஹித்தலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹித்தல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹித்தலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்த நிலையில் மணமகள் உயிரிழந்ததால் திருமணம் நின்று போனது. இருப்பினும் அங்கு இருந்தவர்கள் ஹித்தலின் தங்கையை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, விஷாலுடன் ஹித்தலின் தங்கையை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !