Skip to main content

பழைய பள்ளித் தோழி மீதான காதல்... ஆணாக மாறிய பெண் தோழி... 6 வயது மகளை தவிக்கவிட்ட சம்பவம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

ராமநாதபுரம் அருகே திருமணமாகி ஆறு வயது பெண் குழந்தை கொண்ட பெண் ஒருவர் பழைய பள்ளித் தோழியின் மீது காதல் ஏற்பட,  அந்த தோழியும் திருநம்பியாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 Girlfriend turned male ;incident in madurai

 

மதுரையை அடுத்த ஆணையூரைச் சேர்ந்த சேர்ந்தவர் சுகன்யா. மதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2007 ஆம் ஆண்டு சுகன்யா பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அதே பள்ளியில் எப்சியா என்ற தோழி இருந்துள்ளார். இவர்களது நட்பானது செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒன்றாக சுற்றும் அளவிற்கு அதிகமானது. பெண்ணாக இருந்த எப்சியா  நாளடைவில் அவருக்கு ஏற்பட்ட பாலின மாறுபாடு காரணமாக ஆணாக மாற தொடங்கினார். இதை தெரிந்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் எப்சியாவிடம் பழகக்கூடாது என்று கண்டித்ததோடு கடந்த 2012 ஆம் ஆண்டு ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு சுகன்யாவை திருமணம் செய்து முடித்தனர். ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சுகன்யாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்து தற்பொழுது அந்த பெண் குழந்தைக்கு ஆறு வயது ஆகிறது.

 

 Girlfriend turned male ;incident in madurai


இப்படிபட்ட சூழலில் சுகன்யாவின் கணவரான ராஜேஷுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக எழுந்து நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இப்படியிருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகன்யா உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு மீண்டும் தனது பள்ளித் தோழியான எப்சியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்டநாள் பழகிவிட்டு பிரிந்து சென்ற இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொண்டனர்.

 

 Girlfriend turned male ;incident in madurai

 

இதன்மூலம் பழைய நட்பு மீண்டும் தொடர்ந்தது. அப்பொழுது சுகன்யா தனது கணவருக்கு விபத்து நடந்திருப்பதாகவும், இதனால் என்னுடைய வாழ்க்கை சோதனையாகவும், கவலையாகவும் இருப்பதாக சொல்லி அழுதுள்ளார். இதற்கு ஆறுதல் கூற முயன்று எப்சியா கவலைப்படாதே நீ என்னோடு வந்து வீடு நாம் சேர்ந்து புதிய ஒரு வாழ்க்கையைத் தொடங்கலாம் என ஆறுதல் கூறியுள்ளார்.

அவரது ஆறுதல் பேச்சில் மயங்கிய சுகன்யா அவரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியே வந்தார். மேலும் பள்ளி தோழியை கரம் பிடிக்க தனது பெயரை ஜெய்சன் ஜோஸ்வா என்று எப்சியா மாற்றிக் கொண்டார். அதேபோல் அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை திருநம்பியாகவும் மாற்றிக்கொண்டு ஆண்கள் அணியும்படியான ஷர்ட், பேண்ட் மற்றும் ஹேர் கட் செய்து ஆணை போலவே தோற்றமளித்தார்.

 

 Girlfriend turned male ;incident in madurai


மதுரையில் உள்ள ஒரு தனியார் மாலில் வரவேற்பாளராக சுகன்யாவும், திருநம்பியான ஜோஸ்வா காவலாளி ஆகவும் பணி செய்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வரும் நிலையில் சுகன்யாவின் வீட்டார்  அவரின் மகளின் எதிர்காலத்தை கருதி மீண்டும் திரும்பி வருமாறு சுகன்யாவுக்கு அறிவுறுத்தி உள்ளனர். தன்னுடைய ஆறு வயது குழந்தையை தந்தை வீட்டில் தவிக்க வைத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருநம்பியுடன் வாழ்ந்து வரும் சுகன்யாவை மீட்க அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

 Girlfriend turned male ;incident in madurai


இந்நிலையில் தனது 6 வயது மகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார் சுகன்யா. இந்தப் புகார் தொடர்பாக இன்று விசாரணைக்காக கேணிக்கரை காவல் நிலையம் வந்த அவரிடம் குடும்பத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்படி கனவனையும், மகளையும் தவிக்க வைத்துவிட்டு பெண் ஒருவர் இப்படி செய்திருப்பது என்ன மாதிரியான மனிதாபிமானம் என்பதுதான் விளங்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.