Skip to main content

புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டவர் மீட்பு

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டவர் மீட்பு

காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் ‘நெட் காலிங்’ மூலம் வெளிநாட்டில் இருந்து மர்மநபர் அலெக்சாண்டருடன் பேசியுள்ளார். மேலும், மின்னஞ்சல் மூலம் வந்த திகில் படங்களையும் அவர் பார்த்துள்ளார்.

கடந்த 3–ந் தேதி நள்ளிரவில் அருகில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று செல்பி படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் நள்ளிரவில் வீட்டில் இருந்து அலெக்சாண்டர் புறப்பட்டுச் சென்றார். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அலெக்சாண்டரின் தம்பி நிரவி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அலெக்சாண்டரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் புளுவேல் விளையாட்டில் 4 சவால்களை நிறைவேற்றி 5–வது கட்டமாக கையில் கத்தியால் கீறி புளுவேல் படத்தை வரைய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அலெக்சாண்டருக்கு அறிவுரை வழங்கினர். அந்த விளையாட்டில் இருந்து அவர் வெளியேறவும் உதவி செய்தனர்.

சார்ந்த செய்திகள்