ADVERTISEMENT

தனிப்படை காவலர்களை பாராட்டிய  திருச்சி மாநகர காவல் ஆணையர்!

10:50 AM Aug 05, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையைத் தடுக்க திருச்சி மாநகரக் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌராஷ்டிரா தெருவில் உள்ள குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.

அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, 8 மூட்டைகளில் இருந்த, 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளர் ஹரீஷ் குமார் என்பவரை கைது செய்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து குடோன் உரிமையாளரைக் கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும், திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகரக் காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT