Commissioner of Police opens new route

Advertisment

திருச்சி கருமண்டபம் சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பகுதியான மன்னார்புரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல புதிய வழித்தடத்தைக் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருச்சி நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் தற்போது மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதில் சிரமம் ஏற்படுவதோடு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாதிப்படைந்தனர். எனவே இதனைச் சரிசெய்ய அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்தில் உள்ள வழித்தடத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ கார் உள்ளிட்டவை கடந்து செல்ல புதிய வழித்தடம் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.