Trichy Police Commissioner inspects various places

திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இன்று கே.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர் மருத்துவமனை, நூலகம், மோப்ப நாய்கள் வளர்ச்சி கூடம், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisment

அதேபோல், மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்றவாறு நாய்களை தயார்ப்படுத்தி வைக்கவேண்டும் என்றும்,பெட்ரோல் பங்கில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களைச் சரிபார்த்து அதை முறையாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Advertisment

Trichy Police Commissioner inspects various places

அதேபோல் காவலர்கள் மருத்துவமனையில் போதுமான மருந்துகள் கையிருப்பு வைத்திருப்பது, அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து, முறையாகப் பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.