Skip to main content

டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல் 

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

டிக்டாக் செயல்பாட்டாளர் சித்ரா காஜல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டிக் டாக் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

அப்போது அவர், டிக்டாக்கை நல்ல விதமாக பயன்படுத்தினால் நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கும். கெட்ட விதமாக பயன்படுத்தினால் விபரீதமாகத்தான் முடியும். என்னோட வீடியோ பார்த்துவிட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றிருந்த பலர் பலன் அடைந்துள்ளனர். சினிமாவில் நுழைவது கடினம். தங்களது திறமைகளை டிக்டாக்கில் வெளிப்படுத்தி சினிமாவில் பலர் நுழைந்துள்ளனர் என்று கூறினார்.


 

 

 chitra kajal


டிக்டாக்கை கொண்டு வந்த சீனா, இதனை டிவுண்டோடு பண்ணுவதிலும், அப்லோடு செய்வதிலும் முதலிடத்தில் இல்லை. இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. டிக்டாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விக்கு,


இந்த உலகம் போகிற போக்கில் நாமும் அதனுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும். என்னை இந்த உலகுக்கு தெரியாது. இந்த டிக்டாக் மூலமாகத்தான் தெரியும்.  அதுபோன்ற நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். சினிமாவுக்கு செல்கிறோம். அதில் காட்டப்படும் நல்ல காட்சிகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டப்படும் கெட்ட விசயங்களை தியேட்டரிலேயே விட்டுவிட வேண்டும். டிக்டாக் கம்பெனி ஏதோ மக்கள் சந்தோஷப்படட்டும் என விட்டுள்ளது. அதனால இது கெட்டுப்போனது, அது கெட்டப்போனது என்று கூறுவதா? 



டிக்டாக்கால் நிறைய பேர் சந்தோஷப்படுகிறார்கள். டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன், டிக்டாக்கே வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அந்த நிலைமைக்கு கொண்டுபோகிற ஒரு சிலரால் நிறையே பேர் பாதிக்கப்படுகிறார்கள். மனைவிக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், கணவனுக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், அதை மீறி செய்வதால் சிலர் தற்கொலை செய்து கொள்வதால், அந்த தற்கொலைக்கு டிக்டாக்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். டிக்டாக்கை நல்ல விதமாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். 
 

 

சார்ந்த செய்திகள்