ADVERTISEMENT

ராமதாஸ் மோசமான பிற்போக்கு அரசியலை கையிலெடுத்துள்ளார்- திருமாவளவன் பேச்சு

08:17 AM Jun 12, 2019 | kirubahar@nakk…

சிதம்பரம் மக்களை தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சியினருடன் வந்து சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகூறி நூல் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்,"வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்தநாள் அதிகாலை 3 மணிவரை இவரது வெற்றி அனைவரையும் எதிர்பாக்கவைத்தது. இவரும் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை போல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தால் யாருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கமாட்டார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம், பணபலத்தில் மிதந்த பாஜக,அதிமுக கூட்டுவைத்துகொண்டு ஒரு இடத்தில் தான் வெற்றி பெறமுடிந்தது. இதற்கு மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து போராட்டத்தின் வாயிலாக மோடி அம்பலத்தை வெளிபடுத்தியது தான் காரணம். இதில் கூட்டணி அமைத்ததில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமிழகத்தில் தாமரை எக்காலத்திலும் மலராது, கருகி போய்விடும் என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழிசை அறிந்திருப்பார். அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த ராமராஸின் சாதிய முகத்திரையை மக்கள் கிழித்தெறிந்தது வரலாற்று சாதனை. திருமா இந்த தொகுதியில் வெற்றி பெறக் கூடாது என்று அதிமுகவை தாண்டி பாமக சாதியை முன்னெடுத்து, அணிதிரட்டி வேலை செய்தது. இதில் அன்புமணியை வெற்றிபெற வைக்க வக்கில்லாமல், திருமாவை தோற்கடிக்க சாதிய அணித் திரட்டல் யாருக்கு லாபம். சாதிய முரண்பாடுகளை கலைந்து சகோதரத்துவமாக இருப்பவர்களிடம் சாதிமோதலை உருவாக்கி குளிர்காய நினைத்த ராமதாஸின் கனவு தவுடுபொடியாகிவிட்டது. அவதூறுகளை புறம்தள்ளி வெற்றிபெற்ற தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல நாட்டுமக்களின் குறைகளை நாடளுமன்றத்தில் ஒலிக்க செய்து முத்திரை பதிப்பார்" என்று வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தொல். திருமாவளவன் பேசுகையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற அரும் பாடுபட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், "திமுக தலைவர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமா இங்கே வெற்றி பெற்றால் அது திருமாவின் வெற்றி அல்ல இது கலைஞரின் வெற்றி என்ற வார்த்தை எவ்வளவு வலிமை மிக்கது என்று அறிந்து திமுகவின் தோழர்கள் பணியாற்றினார்கள். சிதம்பரம் தொகுதியில் அவதூறுகளையும் வதந்திகளையும் புறந்தள்ளி மக்கள் வெற்றியடைய செய்துள்ளனர். ராமதாஸ் அரசியலுகாக என் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் மோசமான பிற்போக்கு அரசியலைக் கையில் எடுத்துள்ளார். நான் சிதம்பரம் தொகுதி மக்கள் மீது நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்..இந்த பகுதியில் சாயப்பட்டறை பிரச்சனை, சாலை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சனைகளும் திர்க்க நடவடிக்கை எடுப்பேன். எனக்கு வாக்களித்தவர்களுகும், வாக்களிக்காதவர்களுக்கும் சிறந்த மக்களை உறுப்பினராக செயல்படுவேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான்தோன்றித் தனமாக சமூகவலைதளங்களில் பதிவு செய்யவேண்டாம்" என்று கூறினார்.

கூட்டத்தில் திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன், சிதம்பரம் நகரசெயலாளர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலார் முத்துபெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, மாவட்டக்குழு வாஞ்சிநாதன்,ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நகர்பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோ, கூட்டணி கட்சிகளை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் சவுகத்அலி, அப்துல்சுக்கூர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தொல். திருமா சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து கொண்டார். இதேபோல் காட்டுமன்னார் கோயில், புவனகிரி பகுதியிலும் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT