ADVERTISEMENT

காய்கறி பெட்டிக்குள் ஹான்ஸ்! டாஸ்மாக் குடோனை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை! 

07:20 PM Apr 19, 2020 | rajavel

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று பில்லூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஒரு டெம்போ வேனை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனரிடம் 'என்ன ஏற்றி வருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'காய்கறிகள் மற்றும் கறிவேப்பிலை போன்றவற்றை ஏற்றி வருவதாக அவர் கூறினார். அதில் சந்தேகமடைந்த போலீசார் காய்கறிகளை சோதனை செய்தனர்.

ADVERTISEMENT



காய்கறி பெட்டிக்குள் ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து டெம்போவில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச சேர்ந்த மாரியப்பன் (43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் 7000 ரூபாய் மதிப்புடைய நான்கு மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மாரியப்பனிடம் விசாரணை செய்ததில் அவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். அங்கு 16 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து கடையின் உரிமையாளர் அக்பர்(73), பஜார் தெருவை சேர்ந்த மங்காராம்(26), பனாராம்(29), கணேஷ்ராம்(20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள், மதுபானக் குடிப்பகங்கள், குடோன்கள் அனைத்தும் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விதிகளை மீறி திறந்த 25-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமத்தை கலால்துறை ரத்து செய்துள்ளது. மேலும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா அருகில் மதுபாட்டில்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான குடோனை நேற்று அதிகாலை மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை தூக்கி சென்றுள்ளனர். அத்துடன் குடோனுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் 6 மதுபான பெட்டிகளையும், ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்ட நிலைய இருந்தது.

இதை பார்த்த கடை உரிமையாளரான ராம்மூர்த்தி அதிர்ச்சி அடைந்து ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து ஐ.ஜி சுரேந்தர் சிங், சீனியர் எஸ்பி அகர்வால், எஸ்.பி இரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த பகுதியை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. மதுபான குடோனில் அனைத்து பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மதுபான குடோனில் ஏழு சி.சி.டி.வி கேமராக்கள் உள்ள நிலையில் கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டு மர்ம ஆசாமிகள் முகக் கவசம் அணிந்த நிலையில் குடோனுக்குள் நுழைந்து மதுபான பெட்டிகளை ஒவ்வொரு அறையாக சென்று கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்களை அடையாளம் கொண்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி(எ)கபாலி(22) சந்துரு(23) ஆகிய இரண்டு பேரையும் மடக்கி அவர்களிடமிருந்து 555 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT