கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் பாவாடை. விவசாயியான இவர் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு பைத்தம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தொடர்பு கொண்டு தவளக்குப்பத்தில் குடியிருக்கும் தனது மகள் சுதா, மருமகன் செல்வகுமார் ஆகியோர்பைத்தம்பட்டியில் நடத்தி வரும் பால் சொசைட்டிக்கு பால் சப்ளை செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். அதனடிப்படையில் இதை நம்பிய பலரும் பாவாடையை ஏஜென்டாக கொண்டு பால் சப்ளை செய்து வந்துள்ளனர்.குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டும் பணம் வழங்கி வந்த நிலையில், அதன் பின்னர் உரிய பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இதேபோல பல பகுதிகளை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பால் சப்ளை செய்த ஏஜென்டுகள் மற்றும் 2000 விவசாயிகளுக்கும் பணம் தரவில்லை என்பதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பாவாடை உள்ளிட்ட ஏஜென்டுகள், விவசாயிகள் சொசைட்டிக்கு சென்று செல்வகுமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோல் இவர்களுக்கு பால் சப்ளை செய்த பலரிடமும் மொத்தம் 32,17,924 ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு பாவாடை கொடுத்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அபிஷேகபாக்கத்தில் இருந்த சுதா, செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஹோண்டா காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாகியுள்ள பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.
இந்த செல்வகுமார் சுதா தம்பதியினர் சமீபத்தில் ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் குறைந்த விலை உணவகத்தை புதுச்சேரியில் பூஜை போட்டு அக்கட்சியின் தலைவர்களுடன் ஆரம்பித்தனர். இதற்கு ஒரு அறக்கட்டளை இருப்பதாக கூறப்படுகிறது.