Skip to main content

தமிழகத்தில் 6,000- க்கும் கீழ் குறைந்த கரோனா!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

 

tamilnadu coronavirus update for today


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5,413 பேருக்கும், வெளி மாநிலத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கரோனா உறுதியானது. 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 5,415 ஆக உள்ளது.

 

கரோனாவால் மேலும் 148 பேர் இன்று உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,199 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 100 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 44,924 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து இன்று மேலும் 7,661 பேர் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 23,83,624 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் 36 வது நாளாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்