/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a71967.jpg)
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வருகை தர உள்ளார். இதனால் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வரும் அவர் அங்கிருந்து சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்துக்கு காலை 8.50 க்கு வர உள்ளார். பின்னர் சாலை வழி மார்க்கமாக நடராஜர் கோவிலுக்கு வருகை தருகிறார்.
மோகன் யாதவைவரவேற்று சாமி தரிசனம் செய்ய நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். இதனையொட்டி கோவிலில் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணிக்கு சிதம்பரம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு புறப்படுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)