Police explanation for Complaint against VJ Sidhu

பிரபல யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “நான் இன்று காலை ஏழுமணி அளவில் யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (VJ Siddhu vlogs) சேனலில் ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரக்கிதையாகவும் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஏர்போர்ட் மீனம்பாக்கம் ரோட்டில் ஓட்டிக்கொண்டும் அதனை யூட்யூப்பிலும் பதிவேற்றம் செய்தும் உள்ளார். இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.

Advertisment

அது மட்டுமல்லால் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி உள்ளார். இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதற்காக தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

Police explanation for Complaint against VJ Sidhu

இந்நிலையில் இந்தப்புகார் குறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியில் (12.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- படம்: எஸ்.பி. சுந்தர்