ADVERTISEMENT

நாம மிஸ் பண்ணியதை மாவட்ட செயலாளர் செஞ்சுட்டாரே! - அதிர்ச்சியடைந்த திருச்சி அமைச்சர்கள்! 

01:16 PM Jul 21, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சட்டசபையில் மானிய கோரிக்கைக்கு செல்லும் அமைச்சர்கள் தங்களுடைய ஆதரவாளர்களை உடன் அழைத்து செல்வதும் அவர்களுக்கு பணம் பார்ட்டி, ஜாலி என திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். இந்த மாதிரியான மகிழ்ச்சியான நேரத்திற்கு கட்சிகாரர்கள் எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.

ADVERTISEMENT

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த மானிய கோரிக்கைக்கு மா.செ.வாக இருந்தால் எல்லாருக்கும் 10,000, பிரியாணி எல்லாம் கொடுத்து அசத்தினார். இந்த மானியக்கோரிக்கையில் மா.செ. பதவி பறிபோனதாலும், புதிதாக எம்.பி.குமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதால் முன்பு மாவட்ட முழுவதும் இருந்த அரசியல் செய்த அமைச்சர் வெல்லமண்டி தற்போது கிழக்கு தொகுதிக்குள்ளே தன்னை சுருக்கிக்கொண்டார்.

இந்த முறை மானியக்கோரிக்கையில் வெல்லமண்டி நடராஜன் சென்னையில் இருந்து கொண்டே தன் ஆதரவாளர்களை பஸ் பிடித்து அழைத்து வரும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மானிய கோரிக்கைக்கு முந்தின நாள் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணியின் இல்ல திருமண விழாவிற்கு எம்.பி.குமார் தலைமையில் பொறுப்பாளர் எல்லோரும் சென்று விட அதிர்ச்சியடைந்த அமைச்சர் எல்லாரும் போயிட்டாங்களே என்று கடைசி நேரத்தில் தன் மகன் ஜவஹரை வைத்து ஒரு குரூப் அழைத்து சென்று ஏதோ கடைமைக்கு செய்வது போல் திருப்தி அடைந்து கொண்டார்.

இதே போல அமைச்சர் வளர்மதியும் மானிய கோரிக்கைக்கு தனக்கென்று பெரிய ஆதரவாளர்கள் யாரையும் வைத்து கொள்வது இல்லை. எல்லாம் அவரது கணவர் மற்றும் மகன்களோடு எல்லா வரவு செலவுகளை வைத்து கொள்கின்றனர். இதனால் இவருக்கு கட்சியில் எந்த ஆதரவாளர்களும் இல்லாதால் எப்போதும் உடன் இருக்கும் அந்த 4 பேரையும் கூடவே வைத்திருந்தார் கூட்டம் காண்பிப்பதற்கு. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களையும் அழைத்து சென்று. ஜெ. சமாதிக்கு எல்லாம் அழைத்து சென்று யாருக்கும் எந்த செலவும் பண்ணாமல் சென்னையை சுத்தி காண்பிச்சு வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கட்சிகாரர்கள் எல்லோரும் அமைச்சர்களின் இந்த கண்டுகொள்ளாத போக்கினால் அதிருப்தி அடைந்தனர். திருச்சி மா.செ.வும், எம்.பியுமான குமார் தன்னுடைய பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு திருச்சியில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 25 பேரை தேர்வு செய்து டெல்லிக்கு திருச்சியிலிருந்து விமான மூலம் 5 நாள் சுற்றுப்பயணமாக அழைத்து சென்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். கடந்த 17ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை அங்கேயே தங்கியிருந்து நாடாளுமன்றம், தாஜ்மாஹால், செங்கோட்டை, சிம்லா, ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று நிர்வாகிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளார்.

இதை அறிந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜான், நாம செய்ய மிஸ் பண்ணியதை மா.செ. செஞ்சுட்டாரே என அதிர்ச்சியடைந்தார். உடனே தன்னுடைய மகன் ஜவஹரை வைத்து புத்தூரில் உள்ள அமைச்சர் அலுவலகத்திற்கு திருச்சி மாநகரில் உள்ள வட்ட செயலாளர்கள் எல்லோரையும் அழைத்து பரிசு பை கொடுத்து இது முற்கட்ட தான் அடுத்த வாரம் குற்றாலத்திற்கு அழைச்சுட்டு போய் கறி மீன் எடுத்து ஜாலியா இருக்கலான்னு அப்பா சொல்லியிருக்கார் என்று சமாளித்திருக்கிறார். நமக்கு வந்த வரைக்கு இலாபம் தான். அடுத்த வாரம் குற்றாலம் டூர் என ஜாலியாக கலைந்து சென்றிருக்கிறார்கள்.

யார் கண்ணு பட்டதோ தெரியல அடுத்த நாளே அமைச்சர் இப்போதைக்கு குற்றாலம் ஜாலி டூர் தற்போதுதைக்கு தள்ளிவைக்கலான்னும் யோசனை சொல்லியிருக்கார். இதனால் ஆதரவாளர்கள் டீம் அப்செட்டில் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT